மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் நடத்தும் வனப்பயிற்சியாளர் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைப்பு + "||" + Forest Expert Examination Postponed for October

தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் நடத்தும் வனப்பயிற்சியாளர் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் நடத்தும் வனப்பயிற்சியாளர் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வனப்பயிற்சியாளர் பதவிக்கு எழுத்து தேர்வுகளை செப்டம்பர் மாதம் 23–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை நடத்துவதாக அறிவித்து இருந்தது.
சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வனப்பயிற்சியாளர் பதவிக்கு எழுத்து தேர்வுகளை செப்டம்பர் மாதம் 23–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை நடத்துவதாக அறிவித்து இருந்தது.

அந்த நாட்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் மாதம் 28–ந்தேதி முதல் 5 நாட்கள் குடிமைப்பணிகளுக்கான முதன்மை தேர்வுகள் நடத்துவதாக அறிவித்துள்ளன.

எனவே விண்ணப்பதாரர்கள் நலன் கருதி வனப்பயிற்சியாளர் தேர்வை அக்டோபர் 6–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.