மாநில செய்திகள்

பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு + "||" + Inquiry into the High Court

பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை, 

சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமைச்சாலை திட்டத்தின், திட்ட இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 18–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.