மாநில செய்திகள்

பிறந்தநாள் விழா: திருநாவுக்கரசருக்கு ராகுல்காந்தி வாழ்த்து + "||" + For Tirunavukkarasar Congratulating Rahul Gandhi

பிறந்தநாள் விழா: திருநாவுக்கரசருக்கு ராகுல்காந்தி வாழ்த்து

பிறந்தநாள் விழா: திருநாவுக்கரசருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவருக்கு ராகுல்காந்தி தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார்.
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

மேலும் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீர ரெட்டி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எஸ்.டி. பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோரும் தொலைபேசி வாயிலாக திருநாவுக்கரசருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனில் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது.

ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

பிறந்தநாளையொட்டி திருநாவுக்கரசர் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.