மாநில செய்திகள்

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து + "||" + Many electric trains will be canceled tomorrow

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையே பல மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முழுவதும் ரத்து

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி மின்சார ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்களும் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 10.10 மணி ரெயிலும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி ரெயில்களும், செங்கல்பட்டு-கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில், திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...