பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைப்பு
x
தினத்தந்தி 14 July 2018 2:39 AM GMT (Updated: 14 July 2018 2:39 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 79.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 72.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறையை கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வந்தது. கடந்த மே மாதம் முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், வெறும்10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது. 

இதையடுத்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. ஜூன் மாத இறுதியிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 79.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 72.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனிடையே நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story