கன்னியாகுமரி சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலை கையகப்படுத்த கூடாது தமிழ்நாடு நாடார் சங்கம் வேண்டுகோள்


கன்னியாகுமரி சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலை கையகப்படுத்த கூடாது தமிழ்நாடு நாடார் சங்கம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 July 2018 11:40 PM GMT (Updated: 18 July 2018 11:40 PM GMT)

சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலை கையகப்படுத்த கூடாது என்று தமிழ்நாடு நாடார் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை, 

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு, தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

18-ம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூரில் சாதிக்கொடுமைகள் நடந்த சமயத்தில், அங்குள்ள மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலுடன் போராடியவர் அய்யா வைகுண்டசாமி. ‘அன்பு கொடி மக்கள்’ எனும் இயக்கத்தை உருவாக்கி சாதி ஏற்றத்தாழ்வுகளை தடுத்து நிறுத்தினார். அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் வகையில் ‘முத்திரி கிணறு’ அமைத்து புரட்சி ஏற்படுத்தினார்.

அய்யா வைகுண்ட சாமியின் கருத்தை பின்பற்றி நெறி வாழ்க்கை வாழும் மக்கள் அய்யா வழி என்றே தங்களது ஆன்மிக முறைக்கு பெயரிட்டு அழைக்கிறார்கள். அய்யா வழி வழிபாட்டு முறைக்கும், இந்து மத வழிபாட்டு முறைக்கும் தொடர்பு இல்லை. இதை கருத்தில்கொண்டு அய்யா வைகுண்டர் உருவாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா தலைமைபதியை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story