நாடாளுமன்ற தொகுதிகளை 6 மண்டலமாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமனம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு


நாடாளுமன்ற தொகுதிகளை 6 மண்டலமாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமனம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 July 2018 10:25 PM GMT (Updated: 19 July 2018 10:25 PM GMT)

தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற தொகுதிகளை 6 மண்டலமாக பிரித்து, அதற்கு பொறுப்பாளர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நியமித்துள்ளது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2019-ம் ஆண்டு வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிடும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து, அதற்கான மண்டலப் பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் முதல் மண்டலத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், அமைப்பு செயலாளர்கள் எஸ்.கே.செல்வம், வி.சுகுமார் பாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

2 மற்றும் 3-வது மண்டலம்

திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய தொகுதிகள் 2-வது மண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த மண்டத்தின் பொறுப்பாளர்களாக, கட்சியின் அவைத் தலைவர் எஸ்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இதேபோல், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகிய தொகுதிகள் 3-வது மண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்களாக, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

4, 5, 6-வது மண்டலங்கள்

திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய தொகுதிகள் 4-வது மண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்களாக கட்சியின் பொருளாளர் எம்.ரெங்கசாமி, அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் 5-வது மண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்களாக, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் 6-வது மண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்களாக, அமைப்பு செயலாளர்கள் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, ஆர்.பி.ஆதித்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் - வடசென்னை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வரவிருக்கின்ற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சீரிய முறையில் மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக பொறுப்பாளர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பொறுப்பாளர்களாக, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.ஏழுமலை, மாணவரணி செயலாளர் பொன்.ராஜா, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். வடசென்னை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல், மீனவர் பிரிவு செயலாளர் டி.ஆறுமுகம், வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம்

இதேபோல், தென்சென்னை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக, அமைப்பு செயலாளர்கள் திருவான்மியூர் எஸ்.முருகன், நடிகர் எஸ்.செந்தில், மகளிரணி துணைச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும், மத்திய சென்னை தொகுதி பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், இளைஞர் பாசறை செயலாளர் கே.சி.விஜய் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர்களாக, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் தாம்பரம் நாராயணன், அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கே.குமார், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ம.கரிகாலன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திருவேற்காடு ப.சீனிவாசன் ஆகியோரும், காஞ்சீபுரம் தொகுதி பொறுப்பாளர்களாக, வர்த்தக அணிச் செயலாளர் எம்.சவுந்தரபாண்டியன், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story