மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியை தொட்டது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியை தொட்டது
x
தினத்தந்தி 22 July 2018 3:57 AM GMT (Updated: 22 July 2018 3:57 AM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியை தொட்டது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இந்த 2 அணைகளில் இருந்தும் 1லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மொத்தம் 120 அடி கொள்ளளவை உடைய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை எட்டியுள்ளது.

இதேபோன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64,595 கன அடியில் இருந்து 61,644 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.  அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சி.யாக உள்ளது.

Next Story