தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு


தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 6:41 PM IST (Updated: 1 Aug 2018 6:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திமுக தலைமை கொறடா சக்கரபாணி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி.ஆஷா அமர்வு இன்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு புகார் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனை அடுத்து தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.  புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

Next Story