கருணாநிதி உடல்நிலை தேறியதால் தி.மு.க.வினர் உற்சாகம் காவேரி ஆஸ்பத்திரி முன்பு 94 தேங்காய்கள் உடைப்பு

கருணாநிதி உடல்நிலை தேறியதால் தி.மு.க.வினர் உற்சாகம் காவேரி ஆஸ்பத்திரி முன்பு 94 தேங்காய்கள் உடைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 8:19 PM GMT (Updated: 2018-08-02T01:49:13+05:30)

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக அக்கட்சி தொண்டர்கள் சிலர் தி.மு.க.வின் கொள்கையை மறந்து பிரார்த்தனைகள், வேண்டுதல்களில் ஈடுபட்டனர்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக அக்கட்சி தொண்டர்கள் சிலர் தி.மு.க.வின் கொள்கையை மறந்து பிரார்த்தனைகள், வேண்டுதல்களில் ஈடுபட்டனர்.

காவேரி ஆஸ்பத்திரி முன்பு திருஷ்டி பூசணிக்காயும் சுற்றினர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஒருவர் மொட்டையும் அடித்துக் கொண்டார். இந்தநிலையில் கருணாநிதி உடல்நிலை தேறியதால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக மிகுதியில் அவருடைய வயதை குறிக்கும் வகையில் காவேரி ஆஸ்பத்திரி முன்பு நேற்று 94 தேங்காய்களை உடைத்தனர்.

Next Story