ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆஜராக வேண்டும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆஜராக வேண்டும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
x
தினத்தந்தி 3 Aug 2018 9:13 PM GMT (Updated: 3 Aug 2018 9:13 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வந்த அப்பல்லோ ஆஸ்பத்திரியின் டாக்டர்கள், நர்சுகள் என்று பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, நர்சு அனுஷா ஆகியோரை வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நேரில் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதேபோல, ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் அர்ச்சனா, பிரசன்னா, நர்சுகள் ரேணுகா, ஷீலா ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக வருகிற 7-ந் தேதியும், நரம்பியல் டாக்டர் அருள்செல்வன், கதிர் இயக்க டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் 8-ந் தேதியும், மயக்கவியல் டாக்டர் கே.பாஸ்கர் 9-ந் தேதியும் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story