காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி


காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2018 2:26 AM GMT (Updated: 2018-08-05T07:56:51+05:30)

காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தின் மாமல்லபுரத்தில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் பணி நடந்தது.  இந்த நிலையில் அந்த சாலை வழியே வேகமுடன் வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதி உள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்கள் ஹேமசந்திரா, ஏகாம்பரம் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story