ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை


ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை
x
தினத்தந்தி 5 Aug 2018 7:06 AM GMT (Updated: 5 Aug 2018 7:06 AM GMT)

காவேரி மருத்துவமனைக்கு வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்க மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, மு.க. அழகிரி ஆகியோர் வருகை தந்துள்ளனர். #KauveryHospital

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காவேரி மருத்துவமனைக்கு வருகிறார். இதையொட்டி, சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னை விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று பிற்பகல் காவேரி மருத்துவமனைக்கு ஜனாதிபதி வர உள்ள நிலையில், தற்போது அவரை வரவேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, மு.க. அழகிரி, டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். மேலும் காவேரி மருத்துவமனையை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story