தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரெயில் சேவை பாதிப்பு


தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 1:59 AM GMT (Updated: 2018-08-06T07:29:18+05:30)

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கபெருமாள் கோவில் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் சிங்கபெருமாள் கோவில் மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே ரெயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து புறநகர் ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் காலதாமதத்துடன் பயணிக்கின்றன.  தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான பகுதியில் புறநகர் ரெயில் சேவை கடந்த 2 மணிநேரத்திற்கும் மேலாக பாதிப்படைந்து உள்ளது.


Next Story