தேசிய செய்திகள்

காதலை முறித்துக்கொண்டதால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது + "||" + Delhi Chartered Accountant Shot At By 'Jilted' Lover At Doorstep

காதலை முறித்துக்கொண்டதால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது

காதலை முறித்துக்கொண்டதால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது
டெல்லியில் காதலை முறித்துக்கொண்டதால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,

புதுடெல்லி பரத் நகர் பகுதியை சேர்ந்த 24 வயதான பெண், இவர் கணக்கு தணிக்கையாளராக பணி புரிந்து வருகிறார். அவருடன் பணியாற்றி வந்த ஹரிஷ் சர்மா என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலை முறித்துக்கொண்ட அந்த பெண் சர்மாவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், உறவினர் வீட்டில் தங்கி இருந்த காதலியை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியே போகும்படி அந்த பெண் கூறியுள்ளார். அப்போது அந்த வாலிபர் கையில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார்.

இதனையடுத்து காதலியை  துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அப்பெண் வீட்டிலேயே சுருண்டு விழுந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் காயமடைந்த பெண்ணை  மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

இளம்பெண்ணின் உறவினர்கள் சர்மா மீது புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை  கைது செய்துள்ளனர்.