மாநில செய்திகள்

திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் + "||" + DMK Chief M Karunanidhi supporters crowd outside Kauvery Hospital

திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்
திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. #Karunanidhi


சென்னை,

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி செல்கிறார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையை நோக்கி செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.