மாநில செய்திகள்

கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார் மத்திய மந்திரி நிதின் கட்காரி + "||" + Union minister Nitin Gadkari visits Karunanidhi in Kauvery Hospital

கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார் மத்திய மந்திரி நிதின் கட்காரி

கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார் மத்திய மந்திரி நிதின் கட்காரி
காவேரி மருத்துவமனைக்கு வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். #Karunanidhi

சென்னை,


தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நல குறைவின் காரணமாக கடந்த மாதம் 27–ந் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திட்டமிட்டப்படி மத்திய மந்திரி நிதின் கட்காரி, கருணாநிதியை சந்திக்க சென்னை வந்தார். காவேரி மருத்துவமனை வந்த அவர், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். 

பல சவால்களை கடத்த கருணாநிதி இந்த சவாலையும் கடப்பார் என பா.ஜனதா தலைவர் தமிழிசை நம்பிக்கையை தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ”செந்தில் பாலாஜி சென்றதில் வருத்தம் இல்லை” எங்கிருந்தாலும் வாழ்க- டிடிவி தினகரன்
”யாரையும் பிடித்து வைக்க முடியாது; செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க” என டிடிவி தினகரன் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
2. ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்
தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே உண்மையான தலைவன் என்று திமுகவில் இணைந்தப்பின் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார்.
3. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி
திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. மராட்டியத்தில் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
மராட்டியத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.