டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர்


டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர்
x
தினத்தந்தி 6 Aug 2018 3:55 PM GMT (Updated: 2018-08-06T21:25:05+05:30)

டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர். #CauveryHospital #KarunanidhiHealth

புதுடெல்லி,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மத்திய மந்திரிகள், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் உள்பட திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.


10-வது நாளாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த சில நாட்களாக தொண்டர்கள் வருகை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த காவேரி மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்பான சூழலுக்கு திரும்பியுள்ளது.  

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.  திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். இதேபோல்,  டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர்  விமானம் மூலமாக சென்னை புறப்பட்டுள்ளனர். 


Next Story