மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்


மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Aug 2018 3:02 PM GMT (Updated: 2018-08-07T20:32:32+05:30)

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhi #DMK #ripkarunanidhi #Stalin #EPS


சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு கோரிக்கையை விடுத்தது. இந்நிலையில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை, மாற்று இடம் தர தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story