திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி


திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 5:13 AM GMT (Updated: 2018-08-08T10:43:09+05:30)

ராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் - திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். #RIPKarunanidhi

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி  உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 

* திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி  செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த்  அஞ்சலி செலுத்தினார். லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ராதாரவி அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.

*திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.  சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

* பின்னர் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு.  கருணாநிதியின் குடும்பத்தினர், ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

*  திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்  வீடியோ மூலம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆளுநர் ஆறுதல் தெரிவித்தார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், ஷாலினி அஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகை குஷ்பு அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரபு, சகோதரர் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி அஞ்சலி செலுத்தினர்

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினர். 

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தினார்.

* திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். 

Next Story