திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது


திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2018 10:34 AM GMT (Updated: 8 Aug 2018 10:39 AM GMT)

அண்ணாவை காண புறப்பட்டார் தம்பி, திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

சென்னை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதிக உடலுக்கு அகில இந்திய அரசியல் ஹடி தலைவர்களும், அரசியல்  பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 

ராஜாஜி ஹாலில் இருந்து  இறுதி ஊர்வலம் இன்று மாலை தொடங்கும் என தி.மு.க கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  

திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து  இறுதியாக அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். கலைஞரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டோர் இறுதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கத்துக்கு வருகை தந்தது. அதில் அவரது உடல் ஏற்றபட்டது. கலைஞரின் உடலை ராணுவ வீரர்கள் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றினர். ராணுவ வாகனத்தில் கலைஞரின் உடல் ஊர்வலமாக அண்ணா நினைவகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Next Story