திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது


திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 8 Aug 2018 1:18 PM GMT (Updated: 2018-08-08T18:48:18+05:30)

திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi #DMK

சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருடைய உடல் மெரினாவில் அண்ணா நினைவிட பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. அண்ணா நினைவிடம் வந்த கருணாநிதியின் உடல் முப்படைகளின் பேண்டு வாத்தியம் முழங்க நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இறுதி சடங்கு செய்யும் பணிகள் தொடங்கியது. 

அண்ணா நினைவிடம் வந்த கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேவேகவுடா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். 

கருணாநிதிக்கு முப்படை வீரர்களின் இறுதி மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அழகிரி, கனிமொழி உள்பட கருணாநிதியின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். 

Next Story