ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக கம்லேஷ் தஹில் ரமானி 12-ந்தேதி பதவி ஏற்கிறார்


ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக கம்லேஷ் தஹில் ரமானி 12-ந்தேதி பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:17 PM GMT (Updated: 9 Aug 2018 9:17 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Next Story