மாநில செய்திகள்

நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு + "||" + Nellai, Coimbatore 5 counties Today is heavy rain Weather Center Announcement

நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு
நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.


தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.