மாநில செய்திகள்

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிசென்னையில் 12-ந்தேதி தொடங்குகிறது + "||" + Home appliance exhibition It starts in Chennai on 12th

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிசென்னையில் 12-ந்தேதி தொடங்குகிறது

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிசென்னையில் 12-ந்தேதி தொடங்குகிறது
தினத்தந்தி-சத்யா இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி வருகிற 12-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.
சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தினத்தந்தி-சத்யா இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி வருகிற 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

இந்த கண்காட்சியில் உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஏற்றுமதி தரத்துடன் கூடிய பர்னிச்சர் வகைகள் மற்றும் பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள் இடம் பெறுகின்றன.


இதில் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளுடன், இலவச பரிசுகளும் அளிக்கப்பட உள்ளன.

ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் டிரம் அல்லது பக்கெட், ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பைனான்ஸ் மூலம் ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சோனி ஹெட் போன் இலவசமாக அளிக்கப்படுவதோடு, பஜாஜ் பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட மாடல் ஏ.சி. வாங்குவோருக்கு இன்டக்‌ஷன் ஸ்டவ் அல்லது வாக்குவம் கிளனர், பிரிட்ஜ் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர், வாஷிங்மெஷின் வாங்குபவர்களுக்கு அதற்கான கவர் ஆகியவை இலவசம்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், சிம்னி, வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை குறைவான விலையில் கிடைக்கும். சமையலறைக்கு தேவையான கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ், இன்டக்ஸன் ஸ்டவ் ஆகிய பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். லேட்டஸ் மாடல் வாஷிங்மெஷின், பிரிட்ஜ், எல்.இ.டி. டி.வி, டி.வி.டி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஆடி அதிரடி தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்களை எளிய தவணை முறையில் வாங்குவதற்கு பஜாஜ் பின்செர்வ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன.

குறைவான மற்றும் 24 மாத அவகாசம் கொண்ட மாதாந்திர தவணை முறைகளுடன், உடனடி லோன் வசதியும் செய்து தரப்படுகிறது. உலகின் முன்னணி பிராண்டு வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு அரிய வாய்ப்பாக அமைந்த கண்காட்சியில் 120-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற உள்ளன.

4 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 8.30 வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.