குழந்தைகள் கடத்தல் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கை ; சென்னை ஐகோர்ட் அதிருப்தி


குழந்தைகள் கடத்தல் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கை ; சென்னை ஐகோர்ட் அதிருப்தி
x
தினத்தந்தி 10 Aug 2018 9:57 AM GMT (Updated: 2018-08-10T15:27:15+05:30)

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை எஸ்பிளனேடில் கடந்த 2016-ல் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்த 8 மாத குழந்தை ராகேஷ், 9 மாத குழந்தை சரண்யா கடத்தல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நிதியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது?, எத்தனை வழக்குகளில் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்? என தமிழக அரசு வரும் 24-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு . வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story