மாநில செய்திகள்

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு + "||" + tnpsc announces group 2 exam

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு :  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #TNPSC
சென்னை,

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில்   1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று  தெரிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். 

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.  குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.