கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு: சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி


கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு: சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 11 Aug 2018 1:19 PM GMT (Updated: 2018-08-11T18:49:16+05:30)

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். #KeralaFloods #Suriya #Karthi

சென்னை,

கேரளாவில் நீடிக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களுக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன், பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தநிலையில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அவர்கள் இந்த நிவாரண தொகையை வழங்கியுள்ளனர்.

Next Story