மாநில செய்திகள்

இந்த மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35 அதிகரிப்பு + "||" + This month Cooking gas Cylinder price Increase of Rs. 35

இந்த மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35 அதிகரிப்பு

இந்த மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35 அதிகரிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35 அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை,

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது.

சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.

மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால் ஜூலையில் ரூ.35-ம், இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35-ம் என விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.