மாநில செய்திகள்

சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை + "||" + in Chennai B Ramachandhra Adithanar Birthday party Flower respect of political parties

சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை

சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை
சென்னையில் நடைபெற்ற மறைந்த ‘மாலைமுரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசியல் கட்சியினர் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை,

மறைந்த ‘மாலைமுரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘மாலை முரசு’ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அவரது முழு உருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப் படத்திற்கு ‘மாலைமுரசு’ இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதேபோல், பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வணிகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து உள்ளிட்டோரும், பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோரும், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நிர்வாகிகள் சந்தானம், எம்.எஸ்.பாலாஜி ஆகியோரும், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அவரது மகன் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வக்கீல் கண்ணன், நாஞ்சில் மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர் மற்றும் நிர்வாகிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, இணைச் செயலாளர் யு.நடராஜ், பீமராஜன், அசரப், கணேசன், சண்முகசுந்தரம், மோகன் ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

அமைப்புசாரா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மண்பாண்ட சங்கத் தலைவருமான சேம.நாராயணன் நிர்வாகிகளுடன் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.பி.ராஜா தாஸ், அருண் அன்கோ அருணாசலம், நாடார் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவர்கள் கரு.சின்னதுரை, பி.திராவிட மணி, சென்னை வாழ் நாடார் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கமுத்து, செயலாளர் எஸ்.செல்லதுரை, சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் அரி, அம்பத்தூர் நாடார் கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஆர்.சுபாகரன், மவுலிவாக்கம் சுற்று வட்டார நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆனந்தராஜ், பொதுச் செயலாளர் எஸ்.பி.பாஸ்கர், கவுரவ தலைவர் எம்.தங்கசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஜி.பொன்ராஜ், செயலாளர் ராகவன் ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அகில இந்திய நாடார்கள் பாதுகாப்பு பேரவையின் பொதுச் செயலாளர் கு.சுந்தரேசன், துணைத் தலைவர் துரை, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ், நடிகர்கள் போஸ் வெங்கட், நெல்லை சிவா, முத்துக்காளை, கிங்காங், சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நாட்டுப்புற பின்னணி பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை