மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும்: தினகரன் + "||" + AMMK will contest in Thiruparankundram,Tiruvarur constituency: Dinakaran

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும்: தினகரன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும்: தினகரன்
வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அமமுக கட்சி போட்டியிடும் என அமமுக தலைவர் தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #AMMK
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக கட்சியில் எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் சமீபத்தில் மறைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன், கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த அமமுக தலைவர் தினகரன் கூறுகையில், ”வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அமமுக கட்சி போட்டியிடும். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை வைத்து வெற்றி பெறுவோம். சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து அறிவிப்போம்” எனக் கூறினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை