வெள்ள பாதிப்புகள் குறித்து பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ஸ்டாலின்


வெள்ள பாதிப்புகள் குறித்து பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:02 PM GMT (Updated: 12 Aug 2018 4:02 PM GMT)

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியின் மூலம் கேட்டறிந்தார். #KeralaFloods #MKStalin

சென்னை, 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் கேரளா தத்தளிக்கிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்நிலையில் திமுக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளசேத நிலவரம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தார். இது குறித்து அவர் தனது சமூகவலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் எண்ணங்கள் எல்லாம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை எண்ணியே இருக்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.

Next Story