மாநில செய்திகள்

பிறந்த நாளன்று விதைப்பதற்காக பனை விதைகளை சேகரிக்கும் தொல்.திருமாவளவன் + "||" + On birthday Collect palm seeds Thol Thirumavalavan

பிறந்த நாளன்று விதைப்பதற்காக பனை விதைகளை சேகரிக்கும் தொல்.திருமாவளவன்

பிறந்த நாளன்று விதைப்பதற்காக பனை விதைகளை சேகரிக்கும் தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்டு 17-ந்தேதியை அக்கட்சியினர் தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,

இந்த ஆண்டு பிறந்த நாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விதைத்து பனை வளர்ப்போம் என்று தொல்.திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பனை விதைகளை சேகரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியில் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் பனை விதைகளை சேகரித்தார். இதேபோல சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் நேற்று அவர் பனை விதைகளை சேகரித்தார்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட சில பனை விதைகளை சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விதைத்துள்ளார். வருகிற 17-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்க இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.