மாநில செய்திகள்

கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு + "||" + Tamil civil servants to Kerala One day decided to pay a wage

கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு

கேரளாவுக்கு
தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு
கேரளாவுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை, 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும், உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளோம்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதியாக வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன் உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வினை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதா உண்ணாவிரதம்
கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
3. கனமழை எதிரொலி: கேரளாவில் 11 அணைகள் திறப்பு
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை: இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
கேரளா தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
5. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராயர் மூலக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராயர் மூலக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.