மாநில செய்திகள்

தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..!! + "||" + Thank you for the help of Tamils Kerala Brother and Police Department .. !!

தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..!!

தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..!!
கேரள வெள்ள பாதிப்புக்கு பல்வேறு மாநிலங்களும் உதவி செய்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் இருந்து நிவாரண உதவியும் நிவாரண பொருட்களும் லாரி லாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்த மழையாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஏராளமான வீடுகள் தரைத்தளம் வரை மூழ்கிவிட்டன. மழையின் காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் வீடுகள் இடிந்து நாசமாயின. இதுவரை 17 ஆயிரம் வீடுகள் இடிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. வெள்ளம் புகுந்ததால் விவசாய நிலங்களும் நாசமாகி உள்ளன.

மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 374 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன.

கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய  லட்சக்கணக்கான மக்கள் என  ஒரு பெரும் பணியை மாநில அரசு எதிர் நோக்க வேண்டி உள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்கு வரத்து முடங்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பாறைகள், மண் குவியலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது மழை குறைந்து இருப்பதால் வெள்ளநீர் வடிய தொடங்கி இருக்கிறது. நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.

பல இடங்களில் வெள்ளம் நீரில் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லடசம் குழந்தைகள் இதில் அடங்குவர் இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மழை வெள்ளத்தில் இருந்து  602 பேர் திங்கட்கிழமை மீட்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்ற  29  மீனவர்கள் அரசாங்கத்தால் கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.  மக்களுக்கு சுத்தம் செய்யும் கருவிகள் விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கேரள வெள்ள பாதிப்புக்கு பல்வேறு மாநிலங்களும்  உதவி செய்து வருகிறது,  குறிப்பாக தமிழகத்தில் இருந்து நிவாரண உதவியும் நிவாரண பொருட்களும் லாரி லாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் இதற்காக களமிறங்கி உதவி வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு செல்ல காத்திருக்கும் லாரியை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஓராயிரம் நன்றி தமிழ் மக்களே என்று இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், 10 லாரியில் உதவிகள் வந்து குவிந்துள்ளது என்று மெய் சிலிர்த்து போய் தமிழர்களை பாராட்டியுள்ளார்.