சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 23 Aug 2018 2:04 AM GMT (Updated: 23 Aug 2018 2:04 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்துக் கொள்வதால் அவற்றின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

மாதம் இரு முறை, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் மாற்றியமைத்தது. தினமும் பெட்ரோல், டீசலின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அப்போது முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் விலை எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் விலை ஏறி வரும் பெட்ரோல் விலை மறுபடியும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.80 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story