மாநில செய்திகள்

கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - மு.க. அழகிரி + "||" + Adding to the party Stalin should be accepted as leader MK azagiri

கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - மு.க. அழகிரி

கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்   - மு.க. அழகிரி
கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும் என மு.க. அழகிரி கூறி உள்ளார்.
மதுரை,

மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் 7-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

மு.க அழகிரி கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை .

தி.மு.கவில் எங்களை சேர்த்து கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும். கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை  குறித்து ஆலோசிக்கப்படும். 

பொதுக்குழு மட்டுமே தி.மு.க அல்ல அதில் 1500 பேர் மட்டுமே உள்ளனர். என கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri
2. மு.க .அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடக்கவுள்ளதையொட்டி பேரணி நடக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
4. “சென்னை அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்” - மு.க.அழகிரி பேட்டி
‘‘சென்னையில் நடக்கும் அமைதி பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்’’ என்று மு.க.அழகிரி கூறினார்.
5. சென்னையில் 5–ந்தேதி அமைதிப்பேரணி: ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையில் ஆலோசனை
சென்னையில் 5–ந்தேதி நடைபெறும் அமைதிப்பேரணி குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.