எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு 10-ந்தேதி தொடங்குகிறது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு 10-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

எஸ்.எஸ்.எல்.சி.

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

12-ந்தேதி (புதன்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

17-ந்தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்பப்பாடம்

19-ந்தேதி (புதன்கிழமை) - அறிவியல்

22-ந்தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

பிளஸ்-1

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

12-ந்தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் தலைமை பண்பு, டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

17-ந்தேதி (திங்கட்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

19-ந்தேதி (புதன்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயலாஜி, நியூட்ரிசன் மற்றும் டையட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழில்முறை)

22-ந்தேதி (சனிக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

பிளஸ்-2

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

12-ந்தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசன் மற்றும் டையட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண்மை பயிற்சிகள், நர்சிங்(தொழில்முறை), நர்சிங்(பொது).

17-ந்தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், பொது எந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் மற்றும் பயன்பாடுகள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

19-ந்தேதி (புதன்கிழமை) - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

22-ந்தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story