”சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கும் விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை தொடரவேண்டும்” மு.க.ஸ்டாலின்
மருத்துவ சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை தொடரவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKStalin
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் இரவு ‘திடீர்’ உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் அவர் உடல்நலம் சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வார்டுக்கு மாற்றப்பட்டார். விஜயகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் ‘மியாட்’ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.
விஜயகாந்த் வீடு திரும்பியது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று,பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று,பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 2, 2018
Related Tags :
Next Story