மாநில செய்திகள்

அனைத்து பணிகளிலும் முறைகேடுகள்; திமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை - மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை + "||" + Scams on all tasks Investigation if DMK comes to power MK Stalin's warning

அனைத்து பணிகளிலும் முறைகேடுகள்; திமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை - மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

அனைத்து பணிகளிலும் முறைகேடுகள்; திமுக ஆட்சிக்கு வந்தால்  விசாரணை  - மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MKStalin

திருச்சி

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.  . அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி சென்னையில் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
பாரதீய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் சந்திரபாபு நாயுடு, சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதா? மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. வரும் சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் அணிகள் இடையே போட்டி கராத்தே தியாகராஜன் நம்பிக்கை
வரும் சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் அணிகள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும் என கரோத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. கட்சி பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக ரஜினிகாந்துடன் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் பேச்சு
கட்சி பத்திரிகையில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தொடர்பாக அவருடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.
5. திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார்; தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகின்றது - தம்பிதுரை எம்பி
திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.