அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது- ஓ.பன்னீர் செல்வம்


அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது- ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 3 Sept 2018 2:22 PM IST (Updated: 3 Sept 2018 2:22 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என துணை முதல்-அமைச்சர் ஓபன்னீர் செல்வம் கூறினார். #AIADMK #OPanneerselvam

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்  பேசும் போது கூறியதாவது:-

126 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு அணை உடைந்தது இயற்கை, அதனுடன் அதிமுக ஆட்சியை ஒப்பிட கூடாது 

அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா அமைத்துள்ள அதிமுக எனும் கோட்டை வலுவாக உள்ளது. அதிமுக, கரிகாலன் கட்டிய கல்லணை போன்று பலமாக இருக்கிறது.யார் அழைத்தாலும் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ விலைபோக மாட்டார்கள்.

தாம் உண்மைக்குப் புறம்பாக பேசி வருவதாக பொத்தாம் பொதுவாகக் கூறும் டிடிவி தினகரன், எந்தக் கருத்தை உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறேன் என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதற்கான பதிலை அளிக்கத் தயாராக இருப்பப்பதாக கூறினார்.

Next Story