கருப்பு பணத்தை வெள்ளையாக்க தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே டி.டி.வி. தினகரன் பொதுகூட்டங்கள் நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருவொற்றியூர்.
திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி. ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்டவை மாநில அரசின் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்பே கூறினார்.
தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் ரூ.30 ஆயிரம் கோடியை கொண்டு தமிழக மக்களுக்கு சாலை, குடிநீர், மின்சார வசதிகளையும் ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர் மற்றும் மீனவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கலாம்.
மாநில அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. ஜி.எஸ்.டி. பணம் முழுவதையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் இந்த செலவை ஈடுகட்டுவது எப்படி?
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. அந்த தொகையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும். அப்படி பெற்றுத் தந்தால் அது அவர் தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.
டி.டி.வி.தினகரன் மழையில் முளைத்த காளான் போன்றவர். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே ஆங்காங்கே பொதுக் கூட்டங்களை நடத்துகிறார். ஆட்சியை பிடிக்க அவர் பகல் கனவு காண்கிறார். அவருடைய இந்த கனவு பலிக்காது. கனவில் காணும் அரிசி சாப்பாட்டுக்கு உதவாது. கடலை தாண்ட ஆசைப்படும் அவரால் வாய்க்காலை கூட தாண்டமுடியாது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Tags :
Next Story