தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
அரசின் அலட்சியத்தால் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன என்றும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர், கடம்பா ஏரி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு பாசன கடைமடை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., மாவட்ட செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
முன்னதாக, முக்கொம்பில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
இப்பொழுது தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி முக்கொம்பு மதகுகள் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கொம்பு பகுதிகளில் உடைந்திருக்கக்கூடிய இந்த மதகுகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆய்வு செய்திருந்தால் இதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். முறையான அறிவிப்பு இல்லாத வகையில் திடீர் என்று தண்ணீரை அதிகமான அளவுக்கு திறந்துவிட்ட காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அரசினுடைய அலட்சியத்தினால் மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி, தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்திட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கையாக இருக் கிறது.
கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கு வந்து பார்வையிட்டு உடனடியாக இந்தப் பணி முடிவடையும் என்று ஒரு உறுதியை தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், இன்னும் 40 சதவீத பணிகள் கூட முடியாத நிலையிலே தான் இருந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, “காய்ச்சல் சொல்லிக்கொண்டு வருவது கிடையாது, திடீர் என்று வந்து விடுகிறது” என்று ஒரு அறிவுப்பூர்வமான கருத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிக்கிறார். அவர் சொன்னது எதை காட்டுகிறது என்றால் ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல உள்ளது. நீரோ மன்னனுடைய வாரிசு போல, ஒரு அபூர்வமான கருத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
காய்ச்சல் ஏதோ சொல்லாமல் வருகிறது, ஆனால் கமிஷனை பொறுத்த வரையில் சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் இந்த ஆட்சியிலே பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேட்டூர் அணையை பொறுத்தவரையில் கடந்த மாதம் 19-ந் தேதி திறந்துவிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், எடப்பாடி பழனிசாமியை பொறுத்த வரைக்கும் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை. ஏறக்குறைய ரூ.5 ஆயிரம் கோடி வரையிலே இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிகிறது. ஊழலும், மணல் கொள்ளையும் நடைபெற்ற காரணத்தால் தான் இப்பொழுது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி ஒரு கோமா நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது.
விரைவில் தமிழகத்திலே தி.மு.க. ஆட்சி மலருகின்ற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் மீது, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப் படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு செல்லும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் உள்ள கடம்பா ஏரி வறண்டு கிடப்பதை பார்வையிட்டார். அவரை அந்த பகுதி விவசாயிகள் சந்தித்து ஏரிகளுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர், மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டார். செங்கிப்பட்டி பாலத்தை கடந்து சென்றபோது லாரி மோதியதில் காயம் அடைந்த வாலிபர் ஒருவர் சாலையோரம் கிடந்தார். இதை பார்த்த மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி காயம் அடைந்த வாலிபரிடம் நலம் விசாரித்ததுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நிர்வாகிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த வாலிபரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தி.மு.க. தலைவராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த வீட்டின் அருகே கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க, பட்டாசு வெடித்து மு.க.ஸ்டாலினை ஆரவாரத்துடன் வரவேற்றனர். வீட்டுக்குள் சென்ற அவர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அந்த பதிவேட்டில் அவர் தனது கைப்பட எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:-
தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பல முறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக வந்துள்ளேன்.
கழக தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும்.
இவ்வாறு அந்த வருகைப்பதிவேட்டில் ஸ்டாலின் எழுதியிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story