விமான நிலையத்தில் அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி சஸ்பெண்ட்
சென்னை விமான நிலையத்தில் அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு, மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, கலைஞரின் உண்மையான தொண்டர்கள் தன் வசம் தான் இருக்கின்றனர். நான் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன் என்றெல்லாம் கூறி வருகிறார்.
வரும் 5-ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், முக அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story