மாநில செய்திகள்

காதல் தகராறில் பிளஸ் 1 மாணவன் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை + "||" + Love dispute Plus 1 student Tie-on the electric pole

காதல் தகராறில் பிளஸ் 1 மாணவன் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை

காதல் தகராறில் பிளஸ் 1 மாணவன் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை
காதல் தகராறில் பிளஸ் 1 மாணவன் ஒருவனை சக மாணவனின் பெற்றோர் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடுமை நடந்து உள்ளது.
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த கோணாமலை என்ற பகுதியில் வசித்து வருபவர் உத்திரமேரூர். இவரது மகன் தினேஷ் என்பவர் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று  ஒரு மாணவியுடன்  பேசிகொண்டு இருந்தார்.  இந்நிலையில் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான தயாளன், பரத், சாரதி என்ற 3 பேரும்  தினேஷை  காதலிப்பதாக கூரி கிண்டல் செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுடன் சண்டை போட்டு உள்ளார்.

இந்த நிலையில் தினேஷ் வீட்டுக்கு போகும்வழியில் பட்டுவாம்பட்டி என்ற ஊர் வருகிறது. அதை தாண்டிதான் போக அவன் வீட்டுக்கு போக வேண்டும். பட்டுவாம்பட்டியில் நுழைந்ததுமே 3 பேரில் ஒருவனான தயாளன் என்ற மாணவனின் பெற்றோர் தினேஷை வழிமறித்தனர். தயாளனின் அப்பா, அம்மா, உறவினர்கள் சிங்காரம், முனிராஜ் தினேஷை மடக்கி பிடித்தனர்.அத்துடன் அங்கிருந்த ஒரு மின்சார கம்பத்தில் கயிற்றினால் கட்டி வைத்தனர். பிறகு துடைப்பம், செருப்புகளால் தினேஷை கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிராஜ் ,மற்றும் சிங்காரம் ஆகியோரை கைது செய்து உள்ளனர்.