போகிற வருகிற இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது-அமைச்சர் ஜெயக்குமார்


போகிற வருகிற இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது-அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 5 Sep 2018 5:33 AM GMT (Updated: 5 Sep 2018 5:33 AM GMT)

எல்லா இடங்களிலும் போராடக் கூடாது. போகிற வருகிற இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar

சென்னை:

சுதந்திர போராட்ட தலைவர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின்  ஆகியோர்  இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதன்பின்னர் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம், கருத்து தெரிவிக்கலாம். போராட வேண்டாம் என சொல்லவில்லை.  ஆனால் எல்லா இடங்களிலும் போராடக் கூடாது. போகிற வருகிற இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது. குறிப்பிட்ட இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும், விமான நிலையத்தில் கோஷமிடுவது தவறு. தமிழிசை சவுந்தரராஜனுக்காக இந்த கருத்தை கூறவில்லை. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்காகவும் தான் கூறுகிறேன்.தமிழிசையின் புகாரை ஏற்று மாணவி சோஃபியாவின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

அழகிரியின் பேரணிக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதே நோக்கம் என்றும், திமுகதான்  தங்களுக்கு எப்பொழுதுமே எதிரிக் கட்சி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழக அரசு வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை.  என்று கூறினார்

Next Story