நாகையில் செப் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகையில் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
8–ந்தேதி(சனிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தநிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகையில் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அக்.13ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story