ரொமான்ஸ் மூடில் கொடூர தாய் அபிராமியும் கள்ளக்காதலனும் கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள்


ரொமான்ஸ் மூடில் கொடூர தாய் அபிராமியும் கள்ளக்காதலனும்  கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:06 AM GMT (Updated: 2018-09-05T15:36:45+05:30)

குன்றத்தூர் அபிராமியும் கள்ளக்காதலன் சுந்தரமும் கொஞ்சி பேசும் டப்ஸ்மாஷ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார்.

அபிராமி குறித்து சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரும் சுந்தரமும் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இதெல்லாம் யோசித்து பார்த்தாலே நைட் தூக்கம் வருமா என தெரியவில்லை என்கிறார் சுந்தரம். அதற்கு அபிராமியோ ஆனால் இன்னிக்கு நான் நல்லா தூங்குவேன். எல்லா நைட்டும் எனக்காக யார் இருக்கானு யோசித்தாலே பாதி நைட் போய்விடும். இப்ப புருஷன் நீ இருக்க... என்று முழுக்க ரொமான்ஸ் மூடில் போகிறது அந்த வீடியோ.

இது போல் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்  பாடல்பாடுவது போன்ற அபிராமி டப்மாஷ் வீடியோ. 

உனக்கு என்னாடா மரியாதை புறம்போக்கு.. டால்டா  என்கிற  டப்ஸ்மாஷ் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

Next Story