சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு


சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2018 1:44 AM GMT (Updated: 2018-09-06T07:14:08+05:30)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.82.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை, 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.82.62 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story