சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை


சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Sep 2018 4:41 AM GMT (Updated: 2018-09-06T10:11:07+05:30)

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் 24 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதில் 17 பேரும் கடந்த ஜீலை மாதம் 17-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சிறுமி பாலியம் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story